
ஒரு மீனவன் தனது தூண்டிலில் ஒரு செயற்கை புழுவைக் கோர்த்து மீன் பிடிப்பதற்காக தண்ணீரில் வீசினான்.தண்ணீருக்குள் புழுவைக் கண்ட குட்டி மீன் அதனை கவ்வ ஆவலுடன் ஓடியது.உடனே தாய் மீன் அதனை தடுத்து "அவசரப்படாதே! ஆபத்தில் மாட்டிகொள்வாய்.அது உண்மையிலேயே புழுதானா அல்லது தூண்டிலா என்பது உனக்கு எப்படித் தெரியும்? பொறுத்துப்பார். வேறு யாரவாது முதலில் பிடிக்க முயற்சிக்கட்டுமே! உண்மையான புழுவாக இருந்தால் முதல் தாக்குதலை அது சமாளிக்கும்.இரண்டாவது தாக்குதலை நீ பார்த்துகொள்ள வேண்டும்.கிடைக்காவிட்டாலும் ஆபத்து இல்லாமலாவது இருக்கும்" என்று கூறியது.
தாய் மீன் இவ்வாறு கூறிய சிறிது நேரத்தில் ஒரு வஞ்சன மீன் அந்த புழுவைக் கவ்வியது.உடனே தூண்டிலுக்குள் சிக்கிக் கொண்டது.
தாயின் அனுபவ அறிவுரையால் குட்டி மீன் தூண்டிலில் சிக்காமல் தப்பித்து கொண்டது.
நீதி: எந்த நேரத்திலும் அவசரப்படாமல் பொறுமையாக சிந்தித்து முடிவு எடுக்கவேண்டும்.
No comments:
Post a Comment