
வேடன் ஒருவன் ஒரு மானை விரட்டிக்கொண்டு வந்தான்.அது அவனிடமிருந்து தப்பித்து அடர்ந்த செடிகளுக்குள்ளே நுழைந்து இலைகளின் மறைவில் பதுங்கி கொண்டது.சுற்றி முற்றி தேடி பார்த்த வேடன் , மான் தன்னுடைய கண்ணுக்கு புலப்படாததால் ஏமாற்றத்துடன் திரும்பினான்.
வேடன் திரும்பி செல்ல முயன்றதும் தன்னை மறைத்து காத்த இலை , செடி கொடிகளை ஆவலுடன் மான் தின்னத் தொடங்கியது.இலைகள் அசையும் ஒலி கேட்ட வேடன் திரும்பி பார்த்தான். அசையும் இடத்தை நோக்கி ஒரு அம்பை எய்தான்.அது மானின் மீது பாய்ந்து மான் கீழே சாய்ந்தது.
சாகும்போது மான்,"எனக்கு இந்த தண்டனை நியாயமானதுதான்.எந்த இலைகள் என்னை மறைத்து வேடனிடமிருந்து உயிரை காத்தனவோ,அந்த இலைகளை அழிக்கத் துவங்கியது நன்றி கெட்ட செயல்" என்று கூறி மிகவும் மனம் வருந்தி உயிரை விட்டது.
நீதி : ஆபத்து காலத்தில் நம்மை காத்தவர்களை அழிக்க நினைப்பது நம் அழிவுக்கு வழிவகுத்திடும்.
No comments:
Post a Comment