
ஊரை ஒட்டி இருந்த தோப்பின் நடுவில் கோயில் கட்டும் பணி நடந்துகொண்டிருந்தது. அங்கு மரங்களில் ஏராளமான குரங்குகள் இருந்தன. கோயில் கட்டிட வேலை செய்யும் தொழிலாளர்கள் மதியம் வேலையை நிறுத்திவிட்டு ஊருக்குள் சென்று மதிய உணவு சாப்பிட்டு வருவது வழக்கம்.
அங்கு மரத்தை பிளந்து கொண்டிருந்த தச்சன் , பாதி மரத்தை அறுத்தபின் அறுத்த பிளவில் ஆப்பு வைத்துவிட்டு சென்று விட்டான்.குரங்குகள் மரத்தில் ஏறி குதித்து விளையாடிக் கொண்டிருந்தன.
அப்பொழுது ஒரு குறும்புகாரக் குரங்கு, ஆப்பு வைக்கப்பட்ட மரத்தின் மீது ஏறி அந்த ஆப்பை அசைத்து அசைத்துப் பிடுங்கியது.ஆப்பு விடுபட்டதும் அந்த இடைவெளியில் குரங்கின் வால் சிக்கி ,பிளவு பட்ட மரம் ஒன்று சேர்ந்ததால் நசுங்கி அலறியது.
தேவையற்ற விளையாட்டு விளையாடியதால் ஆபத்தில் மாட்டிக்கொண்டது.
நீதி : வேடிக்கை வினையாகும்
No comments:
Post a Comment