Search This Blog

Tuesday, July 29, 2008

சிந்தனைத் துளிகள் - 2

கோபம் வேண்டாம்
தீ எரியக்கூடிய பொருள்களை எரித்துவிட்டு, தான் அவிந்து போவதைப்போல, கோபம் மனிதனை அழித்துவிட்டுத் தானும் அடங்கிவிடுகிறது.
-மகாவீரர்
சுவர்க்கத்தின் வாயில்கள், வானுயர்ந்த மாமன்னன் அரண்மனையின் வாயில்கள் போல் உயரமாக அமைந்திருக்காது. அங்கே நீங்கள் நுழைய வேண்டுமானால் முழங்கால் மண்டியிட்டு குனிந்து ஊர்ந்துதான் செல்ல வேண்டும்.
-ஜான் அகஸ்டின்
ஒரு சிறிய கோபம் பெரிய திட்டங்களை அழித்துவிடும். நீ எவ்வளவு கோபித்தாலும் நான் உலகத்தையே நாடுவேன். நீ நொடிப்பொழுது கோபத்தை அடக்கப் பழகிக்கொண்டால், வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாக இருக்கலாம். கோபம் கொள்வதற்கு முன் அதன் விளைவுகளை எண்ணிப்பார். நீ கோபமாய்ப் பேசும்பொழுது அறிவு தன் முகத்துக்குத் திரையிட்டுக்கொள்கிறது.
-கன்பூஷியஸ்
தண்டிப்பதற்கு ஆற்றல் உள்ளபோது தான், துன்பம் செய்யாதிருப்பது சிறப்பானது. அந்தச் செயலைத்தான் மன்னித்தல் என்று சொல்வார்கள்.
-காந்தியடிகள்
காழ்ப்பு, கசப்பு, வெறுப்பு, கோபம்கொள்வது பாவச்செயல். சகிப்புத்தன்மை, அன்பு, கருணை, மன்னித்தல், மனிதப் பரம்பரையின் மாபெரும் பொக்கிஷங்கள். முன்னையது உங்களை அழிக்கவல்லகொடிய நஞ்சு, பின்னையது உங்களை வாழ வைக்கும் அமிர்தம்.
-கெளதம புத்தர்

No comments: