சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி
ஒரு ஊர்ல ஒருமடம், அதுல் ஒரு ஆண்டி. அவன் ஒரு சங்கோடும் சேகண்டியோடும் படுத்திருந்தான். யாசகம் மோசம். பசி வேறு. அப்போது இரு திருடர்கள் அந்தப்பக்கம் வந்தார்கள். அவர்களுக்குத் தொழில் சரியில்லை. அவர்களிடம் ஆண்டி பேச்சு கொடுத்தான். அவர்களுடைய ஆள் ஒருவன் வராத்தால் ஆண்டியைக் களவுக்கு அழைத்துக் கொண்டு போனார்கள். அவர்கள் தடுத்தும் கேளாமல் சங்கையும் தன்னோடு எடுத்துக் கொண்டான். ஓர் ஆட்டுக் கிடைக்கு போனார்கள். நல்ல வேளை நாய்கள் இல்லை. காவல்காரர்கள் நின்றுக் கொண்டே தூங்கிக் கொண்டிருந்தார்கள். திருடர்கள் ஆளுக்கொரு ஆட்டைத் தூக்கினார்கள். ஆண்டியும் ஒரு கொழுத்த ஆட்டைத் தூக்கினான். ஆடு சத்தம் போட்டது. திருடர்கள் அவனிடம் '' சங்கைப் பிடி '' என்று எச்சரித்தனர். ஆண்டி ஆட்டின் சங்கைப் பிடிப்பதற்குப் பதிலாக தன்னிடமிருந்த சங்கை எடுத்து ஊதிவிட்டான். அவ்வளவுதான். காவல்காரர்கள் விழித்துக் கொண்டார்கள். திருடர்களைக் கையும் களவுமாகப் பிடித்துக் கொண்டார்கள். '' சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி '' என்று திருடர்கள் வருத்தப்பட்டாகள்
Tuesday, July 29, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment